ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.
அதன்படி இன்றும் (செப்.14) பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 9 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நிலவரம் விலை கிலோ1க்கு
மல்லிகை: 600/1480
முல்லை: 550/635
காக்கடா: 400/450
செண்டு: 10/72
கோழி கொண்டை: 20/90
ஜாதி முல்லை: 400/500
கனகாம்பரம்: 850
அரளி: 70
துளசி: 50
செவ்வந்தி: 120