சென்னையில் நாளை (மார்ச்.09) புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நாளை தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.