ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த துலுக்கன் தோட்டம் அஞ்சனூரைச் சேர்ந்தவர் பாலுசாமி (49). லாரி டிரைவரான அவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 15-ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று கடும் தூர்நாற்றம் வீச, அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, சேலையில் தூக்கு மாட்டிய நிலையில் பாலுசாமி சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த அவரது மனைவி வசந்தி அளித்த புகாரின் பேரில், வீரப்பம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.