ஈரோட்டில் கண் தான விழிப்புணர்வு பேரணி

56பார்த்தது
ஈரோட்டில் கண் தான விழிப்புணர்வு பேரணி
ஈரோட்டில் தேசிய கண் தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி இதயம் நற்பணி இயக்கம், அரசன் கண் வங்கி சார்பில் கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு டாக்டர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதயம் நற்பணி இயக்க தலைவர் டாக்டர் மகாதேவன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி பங்கேற்று, கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர்களையும், அதிகளவில் கண் தானம் பெற்று தந்த சமூக ஆர்வலர்களை பாராட்டி சான்றிழ்கள் வழங்கினார். மேலும், கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு கண் கண்ணாடியை வழங்கினார். தொடர்ந்து, அமைச்சர் சு. முத்துசாமி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது, கருங்கல்பாளையம் பூங்குன்றனார் வீதியில் துவங்கி, கே. என். கே. சாலை, காந்தி சிலை, காவேரி சாலை வழியாக காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் அபுல்ஹசன், டாக்டர் கவுதம் கணபதி, டாக்டர் தங்கவேலு, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி