ஆங்கில புத்தாண்டு: பூக்கள் விலை உயர்வு

67பார்த்தது
ஆங்கில புத்தாண்டு: பூக்கள் விலை உயர்வு
ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி பூக்கள் வாங்குவதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளனர். இதனால், அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.2,300, ஐஸ் மல்லி ரூ.1,800, முல்லை மற்றும் கனகாம்பரம் ரூ.1,200, ஜாதிமல்லி ரூ.900, அரளி பூ ரூ.350, சாமந்தி ரூ.100, சம்பங்கி ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.140, சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் வியாபாரம் களைகட்டியுள்ளது. ஊட்டி ரோஸ் பஞ்ச் ரூ.250ல் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you