திருவள்ளூர்: திருத்தணி அருகே தரணிவராகபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (40) விவசாயி. இவர் இன்று (ஜுலை 30) தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கமலா திரையரங்கம் அருகில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. ஸ்கூட்டரின் பேட்டரி பகுதியில் தீ பரவியதைப் பார்த்த ரமேஷ்குமார் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பினார். அங்கு இருந்த போலீசார் தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர்.