தேர்தல் பத்திரம் என்பது லஞ்சம் - அன்றே சொன்ன ராகுல் காந்தி

62பார்த்தது
தேர்தல் பத்திரம் என்பது லஞ்சம் - அன்றே சொன்ன ராகுல் காந்தி
அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018 இல் அமல்படுத்தியது. இதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது. தற்போது உச்சநீதிமன்றம் , “இந்த சட்டவிரோத திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. "தேர்தல் பத்திரம் நன்கொடை என்பது லஞ்சம்" என்று ராகுல் காந்தி, அது அறிமுகப்படுத்தப்பட்ட போது X பக்கத்தில் பதிவிட்ட கருத்து தற்போது வைரலாகி வருகிறது.