அப்பளம் அதிகம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கு என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பளம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு. அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீண்ட காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எண்ணெயில் அப்பளங்கள் வறுத்து எடுக்கப்படுவதால் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். மேலும், அப்பளத்தில் சோடியம் அதிகமாக இருப்பதால் உடல் எடையை அதிகரித்து, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.