பாதாம் பிசினில் உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. பாதாம் பிசினை ஊற வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிட்டு வரலாம். இதனால் சருமம் பளபளப்பாக மாறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். உடல் குளிர்ச்சியடையும். வயிறு மற்றும் வாயில் உள்ள புண்கள் ஆறும். இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் எலும்புகளை பலப்படுத்துகிறது. பெண்களுக்கு கருப்பையை பாதுகாத்து கருத்தரித்தலை ஊக்குவிக்கிறது.