பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

75பார்த்தது
பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக என்டிஏ கூட்டணி ஆட்சியமைப்பது, அக்கூட்டணி மீதும், பிரதமர் மீதும் நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

ஓய்வின்றி உழைத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு, இந்தியாவை மேலும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி