பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள்

66பார்த்தது
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள்
இந்திய பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள நிலையில் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்பது உறுதியாகியுள்ளது. நேபாளம் பிரதமர் புஷ்பா கமல் தஹல், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.