"அதிமுக பற்றி பேச ஓபிஎஸ்-க்கு உரிமையில்லை"

60பார்த்தது
"அதிமுக பற்றி பேச ஓபிஎஸ்-க்கு உரிமையில்லை"
அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி காட்டமாக பேட்டியளித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையோடு கூட்டணி அமைத்தவர். பாஜகவுடன் இணைந்து அதிமுகவின் இரட்டை இலைக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு, தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது" என்றும் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி