மதுபோதையில் விபத்து - பேருந்து ஓட்டுநருக்கு தர்ம அடி

65பார்த்தது
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். தனியார் பேருந்து ஓட்டுநர் திருநாவுக்கரசு என்பவர், மதுபோதையில் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் மீது மோதியதில், அவர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும் மற்ற பேருந்து நடந்துனர்களும் திருநாவுக்கரசை கடுமையாக தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி