தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு இன்று (மே 15) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 18 ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், மே 19 ஆம் தேதி நீலகிரி கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.