யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கடந்த 5 நாளில் பெண் காவலர்கள் 16 பேரும், ஒரு சமூக ஆர்வலர் என மொத்தம் 17 பேர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல வழக்குகளில் ஏற்கனவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.