தெலுங்கு தேச வேட்பாளரின் பாதுகாவலர் கொல்ல முயற்சி

20482பார்த்தது
ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் அருகே உள்ள ஆல்லகட்டாவில் தெலுங்கு தேச வேட்பாளர் அகிலப்ரியாவின் பாதுகாவலர், இன்று (மே 15) அதிகாலை சாலையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக காரில் வந்தவர்கள் அவர் மீது மோதி கொலை செய்ய முயன்றனர். இதில், நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். உடனே காரில் இருந்தவர்கள் இறங்கி பாதுகாவலரை தாக்க விரட்டினர். அவர், அங்கிருந்து தப்பி, அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றுவிட்டார். பின்னர், அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

தொடர்புடைய செய்தி