காஞ்சிபுரத்தில் 41வது மாநகராட்சி வார்டு பகுதி ஜெம் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்களால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கூறும் மக்கள் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வீடுகளுக்கு முன்பு வாகனங்களை நிறுத்தும் மது பிரியர்கள் குடியிருப்பு பகுதியில் வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது, தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.