போதைப் பொருள் வேட்டை - 55 பேர் கைது

70பார்த்தது
போதைப்  பொருள் வேட்டை - 55 பேர் கைது
தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ''புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை''மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 7 நாட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 55 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 220.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 3.1 கிலோ மாவா, பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி