ஓட்டுநர் உரிமம்: போலி மருத்துவர்களுக்கு செக்

70பார்த்தது
ஓட்டுநர் உரிமம்: போலி மருத்துவர்களுக்கு செக்
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஒரு சில இடங்களில் போலி மருத்துவரிடம் சான்றிதழ் தயாரித்து, சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து உரிமம் பெற்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இது அரசின் கவனத்திற்கு வந்ததால், தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது மருத்துவ கவுன்சிலின் பதிவு சான்று எண்ணை உள்ளீடு செய்து, தங்களது மருத்துவமனை விபரங்களை பதிவேற்றம் செய்து, செல்போனுக்கு வரும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்த பின்னரே, சான்றிதழ்களை பதிவேற்ற செய்ய முடியும் என்கிற புது விதியை கொண்டு வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி