"ராகுல் காந்தி போல் செயல்படாதீர்கள்" - பிரதமர் மோடி அறிவுரை

66பார்த்தது
"ராகுல் காந்தி போல் செயல்படாதீர்கள்" - பிரதமர் மோடி அறிவுரை
'ராகுல் காந்தியை போல் செயல்படாதீர்கள்' என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். மக்களவையில் ராகுல்காந்தி போல் செயல்படாதீர்கள்; தகவல்களை சரிபார்த்துப் பேசவும் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவும் வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை பொறுக்க முடியாமல் காங்கிரஸ் தவிக்கிறது என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். நேற்று பாராளுமன்ற கூட்டத் தொடரில் ராகுல் காந்தியின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி