காயத்தில் துணி வைத்து தையல் போட்ட மருத்துவர்கள்

60பார்த்தது
காயத்தில் துணி வைத்து தையல் போட்ட மருத்துவர்கள்
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பூபதி. இவர் அண்மையில் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சூழலில் 3 நாட்களாகியும் வலி குறையாமல் இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அதில், காயத்தில் துணியை வைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தைத்தது தெரியவந்தது. இதையடுத்து தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவமனை மீது மாவட்ட ஆட்சியரிடம் பூபதி இன்று (ஜூன் 11) புகார் அளித்தார்.