9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

81பார்த்தது
9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்
தமிழகத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருவள்ளூர் ஆகிய 9 மாவடங்களில் இன்று (ஜூன் 11) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி