வயநாடு தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக ராகுல் காந்தி நாளை வயநாடு வர உள்ளார். அப்போது, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வது குறித்த தகவலை அவர் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இதில் ஏதாவது ஒரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வார இறுதிக்குள் இது தொடர்பான முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவிக்க அவர் தீர்மானித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.