விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து அதிமுக இன்று (ஜூன் 11) ஆலோசனை மேற்கொண்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.