பேருந்து மோதியதில் அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ (வீடியோ)

53பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே நேற்று (ஜூன் 10) சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வளைவில் திரும்பும்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த இருவர் காயம் அடைந்தனர். சித்தார்கோட்டை வழியாக அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து வளைவில் திரும்பிய போது ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி