பாராசிட்டமால் நம்பகமான வலி நிவாரணிகளில் ஒன்றாகும். எந்த தொந்தரவும் இல்லாமல் விரைவான நிவாரணம் தருவதால் பெரும்பாலானோர் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த மாத்திரையை சாதாரண அளவான 4 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும் என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. இது கல்லீரல் திசுக்களை சேதப்படுத்துவதாக எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் தொடர்பான சில வகை நோய்களுக்கு இது மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.