தற்போதைய காலத்தில் பலரும் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை பார்க்கின்றனர். இது உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, மாரடைப்புக்கு வழிவகுக்கும். சிறிது கவனத்துடன் செயல்பட்டால் நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை நற்காலியில் இருந்து எழுந்து 2-5 நிமிடங்கள் நடக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய்கள் தாக்காது. திடீர் மரணங்கள், மாரடைப்பு மரணங்கள் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.