இந்தியாவின் தூய்மையான நதி எது தெரியுமா?

74பார்த்தது
இந்தியாவின் தூய்மையான நதி எது தெரியுமா?
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள உம்காட் நதி இந்தியாவின் தூய்மையான நதியாக கருதப்படுகிறது. அதில் பயணிக்கும் படகுகள் காற்றில் மிதப்பது போல் இருக்கும் என கூறுகின்றனர். உம்காட் நதி ‘டௌகி’ என்றும் அழைக்கப்படுகிறது. டௌகி இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள ஒரு சிறிய நகரம். இந்த தூய்மைக்கு காரணம் இங்கு வாழும் பழங்குடி சமூகங்களின் முன்னோர்களிடமிருந்து வரும் பாரம்பரியம் என்று நம்பப்படுகிறது. இது பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெரியவர்களால் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி