சென்னை இளைஞர் குழந்தைகள் ஆபாச படம் பார்த்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பின் போது, “குழந்தைகள் தொடர்பான இத்தகைய வழக்குகளில் குழந்தைகள் ஆபாசப்படம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் அதற்குப் பதிலாகக் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் எனப் பயன்படுத்த வேண்டும்.” என அறிவுறுத்தியிருக்கிறது.