திமுக, பாமக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

56பார்த்தது
திமுக, பாமக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக வேட்பாளர்கள் நாளை (ஜுன் 19) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக மற்றும் தேமுதிக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. வருகிற ஜுலை 10ஆம் தேதி வாக்குப்பதிவும், 13ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளன.

நாதக வேட்பாளர் மருத்துவர் அபிநயாவும் ஓரிரு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி