தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

78பார்த்தது
தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
மீன் பிடிதடைக்காலம் முடிந்து நேற்று முன் தினத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்த இலங்கை கடற்படை, இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. கைதான மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி