3ஆம் மோடி அரசு; எதிர்பாராத சவால்கள்!

74பார்த்தது
3ஆம் மோடி அரசு; எதிர்பாராத சவால்கள்!
மூன்றாவது மோடி அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில், எதிர்பாராத சவால்கள் சந்திக்கின்றன. பெங்கால் ரயில் விபத்தும், நீட் தேர்வு சர்ச்சையும் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளுக்கு சக்திவாய்ந்த ஆயுதமாக அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களும் மத்திய அரசுக்கு தலைவலியாக உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், மூன்றாவது மோடி அரசு, ஒன்றன் பின் ஒன்றாக சோதனையை சந்தித்து வருகிறது.

ரெயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு ஒடிசாவின் பாலசோர் மற்றும் பீகாரின் பக்சர் ஆகிய இடங்களில் ரயில் விபத்துகள் நடந்த போதிலும் பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தொடர்புடைய செய்தி