வியட்நாமில் உள்ள விடுமுறை வில்லா ஒன்றில் தங்கியிருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரேட்டா மேரி ஒட்டெசன் (33) என்ற பெண்ணும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவரது வருங்கால கணவர் ஆர்னோ குயிண்டன் எல்ஸ் (36) என்பவரும் மிக அண்மையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் காலி மது பாட்டில்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோடியின் மரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.