மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் குழுவினர், கூடக்கோவிலிலுள்ள சிவன் கோவிலில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) ஆய்வு செய்தனர். அப்போது, 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த அய்யனார் சிலையானது மூன்றரை அடி உயரம், இரண்டரையடி அகலத்துடன் இருந்தது. தலை மகுடம் விரிந்து அழகான ஜடா பாரமாகவும், காதுகள் இரண்டிலும் பத்திர குண்டலம், கழுத்தில் ஆபரணத்துடன் காணப்பட்டது.