பெட்ரோல் பாட்டிலுடன் விளையாடியபோது தீப்பிடித்ததால், மாணவன் ஒருவரின் உடல் முழுவதும் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், பிஜோனோரில் இந்த சம்பவம் நடைபெற்றது. பெட்ரோல் பாட்டிலை வைத்து சில மாணவர்கள் சாகசங்களில் ஈடுபட்டனர். அவர்கள் பெட்ரோலை கயிற்றில் கட்டி மரத்தில் தூக்கி வீசினர். அப்போது பெட்ரோல் மாணவனின் மீது ஊற்றி தீப்பற்றியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.