வேளாண் பண்ணைகளிலிருந்து நுகர்வோருக்கு நேரடியாக விளை பொருட்களை விற்பனை செய்வது குறித்த ஒரு திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருவதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சௌஹான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்புக்குப் பிறகு சுமார் 400 விவசாயிகளுடன் உரையாடிய சிவராஜ் சிங் சௌஹான், "இத்திட்டம் வேளாண் விளை பொருட்கள் விற்பனையில் இடைத்தரகர்களின் செயல்பாட்டை முழுமையாக தடுக்கும்" என கூறியுள்ளார்.