தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே பட்டப் படிப்புகள் இருந்த நிலையில், அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது கலை பாடங்களில் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கலாம் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் பாடங்கள் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்படும் என கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டது. தற்போது பொறியியல் பாடங்களும் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.