திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகா மானது 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. இம்முகாமிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், அரசு மருத்துவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். இம் முகாமில் புதியதாக அடையாள அட்டை உபகரணங்கள் அரசின் நலத்திட்டம் உதவித்தொகை ஆகியவற்றையும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 109 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.