வேடசந்தூர்: லாரி கவிழ்ந்து விபத்து

74பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துபட்டியில் ஒரு நபரின் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக டிப்பர் லாரிகளில் மண் கொண்டு வந்து கொட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்பொழுது ஒரு டிப்பர் லாரியில் மண் கொட்டுவதற்காக ரிவர்சில் வந்த பொழுது காவிரி கூட்டு குடிநீர் கேட் வாழ்வுக்காக கட்டப்பட்ட தொட்டியின் மேலே இருந்த ஸ்லாப் கல் மீது லாரி ஏறியது. இதில் சிலாப்கல் உடைந்ததால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி டிரைவர் காயம் இன்றி தப்பினார். ஜேசிபி எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டபோது அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி