கேரளாவின் கண்ணூரில் முள்ளம்பன்றி தாக்கியதில் பிளஸ் 1 மாணவர் காயமடைந்தார். 17 வயதுடைய மாணவன் முகமது ஷாதில் என்பவர் மதரஸாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு முள்ளம்பன்றி திடீரென சாலையின் குறுக்கே ஓடியுள்ளது. அதன் மீது ஏற்றிவிடாமல் இருக்க நிறுத்திய போது, முள்ளம்பன்றி கடுமையாக தாக்கியது. அதன் கூர்மையான 12 முள் மாணவனின் உடலில் பாய்ந்தது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.