ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் தற்கொலை

550பார்த்தது
ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

தாடிக்கொம்பை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மனைவி மேனகா (37). இவா்களுக்கு இந்து வாஹினி (16), தானியஸ்ரீ (12) என இரண்டு மகள்கள். இவா்கள் இருவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 10-ஆம் வகுப்பு, 6-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இந்த நிலையில், கள்ளிப்பட்டியில் உள்ள வீட்டில் மேனகா, இந்து வாஹினி, தானியஸ்ரீ ஆகிய மூவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸாா் அவா்களது உடல்களை கைப்பற்றி, சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தொடர்புடைய செய்தி