ரூ.2 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

70பார்த்தது
ரூ.2 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!
இந்தியா - பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் ஏராளமான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் 2.2 கிலோ ஹெராயின் போதைப் பொருளை இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு கடத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த போதைப் பொருள்களில் சந்தை மதிப்பு ரூ.2.2 கோடியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி