ரயில்வே 'சப்வே' வில் கூரை அமைக்கும் பணி

67பார்த்தது
ரயில்வே 'சப்வே' வில் கூரை அமைக்கும் பணி
எரியோடு அருகே செங்கோட்டைப்பட்டியில் ரயில்வே 'சப் வே' வில் கூரை அமைக்கும் பணி நடக்கிறது. எரியோடு அருகே ஒத்தக்கடையில் இருந்து செங்கோட்டைபட்டி கிராமத்தை இணைக்க தார் ரோடு உள்ளது. இடையில் குறுக்கிடும் ரயில் பாதையை கடக்க பல ஆண்டுகளாக ஆளில்லா லெவல் கிராசிங் இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. கூரை அமைக்கப்படாததால் மழை நேரத்தில் பெருமளவில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது ' சப் வே' வுக்கு கூரை அமைக்கும் பணி நடக்கிறது.

தொடர்புடைய செய்தி