திண்டுக்கல்: சீலப்பாடி ஊராட்சியிலுள்ள கொத்தம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 14) நடந்த நிகழ்வில் அம்மன் அலங்காரத்தில் வீதி உலா வந்த பொழுது பக்தர்கள் தீச்சட்டி மற்றும் தீக்குளி இறங்கினர். 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.