பழனி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடைபெற்று. மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நாளை மறுநாள் ( புதன் கிழமை ) மாலை 4: 30 மணிக்கு நடைபெற உள்ளது. மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோயில் வளாகத்தில் மாரியம்மன்க்கு உருவசிலை அமைத்து அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ள தேரோட்டம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.