நாடாளுமன்றத்தில் மும்மொழி கொள்கை குறித்தான விவாதத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்கள் குறித்து நாகரிகமற்றவர்கள் என்று அவதூறாக பேசினார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் மத்திய அமைச்சரை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி பழனி பஸ் நிலையம் மயில் ரவுண்டானா முன்பு நகர திமுக சார்பில் போராட்டம் நடந்தது. நகரச் செயலாளர் வேலுமணி தலைமையில் மத்திய அமைச்சரின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும் , மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கண்டன எழுப்பினர். தொடர்ந்து மத்திய அமைச்சரின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.