திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இ-சேவா கேந்திரா மையத்தை இன்று(செப்.26) முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. முத்துசாரதா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். உடன் கூடுதல் மாவட்ட நீதிபதி, முதன்மை சார்பு நீதிபதி, கூடுதல் சார்பு நீதிபதி, உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நீதிபதி, அரசு வழக்கறிஞர்கள், பழனி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர்.