திண்டுக்கல் மாவட்டம் பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் கிசன் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் துறை, வேளாண் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவலப்பட்டி ஊராட்சியில் பச்சையாறு அணையின் குறுக்கே தடுப்பணை கட்ட விவசாயிகள் வேண்டுகோள் வைத்தனர்.