பாலஸ்தீனியர்களை எந்த சூழலிலும் அவர்களது நிலத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது என்று அரபு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். பாலஸ்தீனியர்களை காசாவிலிருந்து வெளியேற்றி, தங்கள் நாடுகளில் தங்க வைக்குமாறு ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். இதனை ஏற்க மறுத்துள்ள அரபு நாடுகளின் அமைச்சர்கள், டிரம்ப் கூற்றுக்கு எதிராக தங்களின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.