சென்னை ஈசிஆர்-ல் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்தி, மறித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சந்தோஷ், தமிழ்குமரன், அஷ்வின், விஷ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான சந்துருவை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது கடத்தல், பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.